இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக சுதந்திரக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி செயற்பட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக இன்று (சனிக்கிழமை) சட்ட நடவடிக்கை எடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிக் ஒழுக்காற்று குழுவின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது இராஜாங்க அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாக்க, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, டிலான் பெரேரா ஆகியோர் ஒழுக்காற்றுக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அறிவிக்க்பபட்டுள்ளது.

மேலும் இன்று முற்பகல் 10 மணிமுதல் அவர்களுக்காக தனித்தனியாக நேர ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி செயற்பட்டமைக்காக இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.