அமைச்சர் விமல் வீரவன்ச மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு திடீர் விஜயம்!!

மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிற்றெற்) அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் திடீர் விஜயம் மேற்கொண்டார்.


இதன்போது, உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள பிரச்சினைகள், குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார். மேலும் உப்பு பொதி செய்யும் பகுதிக்கும் சென்று பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது, அங்கு கடமையாற்றுகின்ற ஊழியர்கள் தமது பிரச்சினைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவித்தனர்.

குறிப்பாக குறித்த உப்பு உற்பத்தி நிலையத்தில் அதிகமான பெண் ஊழியர்களே கடமையாற்றுவமாகவும், கடினமான வேலைகளை தாங்களே செய்வதாகவும் தெரியப்படுத்தினர்.

குறித்த பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.