சாதிப்பாரா ரோஹித் ஷர்மா?

இந்திய - ஆஸ்திரேலிய இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றனர்.


முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தாலும், இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியிடம், சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதே இல்லை என்ற பேச்சை இந்திய அணி முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சென்ற போட்டியில் சிறப்பாக விளையாடினர். சென்ற போட்டியில் பேட்டிங் போது ஷிகர் தவனுக்கு விலாவில் காயம் ஏற்பட்டது. ரோஹித் ஷர்மாவுக்கு பந்தை பிடிக்க முயன்ற போது இடதுகையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இருவருமே போட்டியில் பங்கேற்பார்களா என்ற கேள்வியும், ஒரு வேளை இருவரும் விளையாடினாலும் 100 சதவீத பங்களிப்பை அளிக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

2019-ஆம் ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா இடையே இரண்டு ஒருநாள் தொடர்கள் நடைபெற்ற போது, முதல் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியாவும், இரண்டாம் தொடரில் 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும் தொடரை கைப்பற்றியது.

2013-ஆம் ஆண்டு இந்திய அணி, பெங்களூருவில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட போது, ரோஹித் ஷர்மா இரட்டை சதத்தை கடந்து இமாலய சாதனை படைத்தார். இதுவரை சின்னசுவாமி மைதானத்தில் 14 சதங்கள் அரங்கேறியுள்ளது, அவற்றில் எந்த அணியின் வீரர் சதம் விளாசுகிறாரோ அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற பேச்சு ரசிகர்களிடையே உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று(ஜனவரி 19) மதியம் 1:30 மணிக்கு பெங்களூருவில் அமைந்துள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.