சச்சின் எழுதிய கடிதம்!

கிரிக்கெட் விளையாடி பிரபலமான மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு பேட் அனுப்பி வைத்து உற்சாகப்படுத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஜனவரி 1ஆம் தேதி அனைவரையும் உத்வேகப்படுத்தும் விதமாக ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், கிரிக்கெட் விளையாடும் போது, பேட்டிங் செய்யும் மாற்றுத்திறனாளி சிறுவன், பந்தை அடித்துவிட்டு தனது கைகளைத் தரையில் ஊன்றி முட்டிகளில் நகர்ந்து ரன்களை எடுக்கச் செல்கிறான், அடுத்து பந்தை எதிர்கொள்ளும் மாணவனிடம் பேட்டை கொடுப்பதற்காக மீண்டும் கைகளை ஊன்றி செல்கிறான். மற்ற சிறுவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறுவனின் முயற்சி அனைவரிடத்திலும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த வீடியோவை பகிர்ந்த சச்சின் கேப்ஷனாக, மட்டா ராம் என்ற மாற்றுத் திறனாளி மாணவன் விளையாடும் இந்த வீடியோவோடு உத்வேகமான புத்தாண்டை தொடங்குவோம், இந்த வீடியோ எனது மனதிற்கு ஒரு இதமான அனுபவத்தைக் கொடுத்தது. இது உங்களுக்கும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சச்சின் அந்த மற்றுத் திறனாளி மாணவருக்கு ஒரு கடிதத்தையும், அதோடு தன் கையொப்பமிட்ட ஒரு பேட்டையும் பரிசாக அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் நீ ரசித்து கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உன் மற்றும் உனது நண்பர்கள் மீதான அன்பின் அடையாளமே இந்த அன்பளிப்பு. தொடர்ந்து விளையாடு என்று தெரிவித்துள்ளார்.
இந்த கிரிக்கெட் பேட்டும், கடிதமும் மட்டா ராமுக்கு நேற்று கிடைத்துள்ளது. அந்த பேட்டை நெஞ்சோடு அணைத்தபடி சிறுவன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.