ஆஸ்திரேலியாவை மீட்ட ஸ்டீவ் ஸ்மித்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, பெங்களூருவில் அமைந்துள்ள சின்னசுவாமி மைதானத்தில் இன்று மதியம் 1:30 மணிக்கு துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


அதிக ரன்களை எடுக்கவேண்டும் என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான, டேவிட் வார்னர் மற்றும் ஆரன் ஃபின்சுக்கு பவுண்டரி அடிப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் வழங்கவில்லை.

பௌன்சர், ஷாட் பிட்ச் மற்றும் அவுட் ஸ்விங் பந்துகளால் வார்னரை பதற்றமடையவைத்து, போட்டியின் நான்காவது ஓவரிலேயே, முகமது ஷமி அவரை வெளியேற்றினார். ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கிய போதும் அதே சூழல் இருந்ததால், ரன்-ரேட்டை பராமரிக்க ஒற்றை ரன்கள் எடுக்க துவங்கினார்கள். 9-ஆவது ஓவரின் கடைசி பந்தில், ஸ்டீவ் ஸ்மித் விளையாடிய பந்து ஜடேஜாவை நோக்கி சென்றது. ரன் எடுக்க வாய்ப்பு இருந்ததாக நினைத்து ஃபின்ச் பாதி கிரீஸ் வரை சென்றார். இருவருக்கும் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக ஆரன் ஃபின்ச் ரன்-அவுட்டாகி 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு இணைந்த ஸ்டீவ் ஸ்மித்-லபுஷேன் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 127 ரன்களை சேர்த்தது. அரை சதத்தை கடந்த லபுஷேன், ஜடேஜா வீசிய 32 ஆவது ஓவரில், விராட் கோலி பிடித்த டைவ்-கேட்ச்சில், 54 ரன்களில் எடுத்து வெளியேறினார்.

லபுஷேன் வெளியேறிய பிறகு 'டெட் ஓவர்சீல்' ஆபத்தாக தெரிந்த சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு ஆஸ்திரேலிய அணி, லோ ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்டார்கை களமிறக்கினார்கள். ஆனால், வந்த வேகத்துலயே ஜடேஜா வீசிய 32 ஆவது ஓவரின் கடைசி பந்தில் மிச்சல் ஸ்டார்க் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் ஃகேரி 35 ரன்களில், குல்தீப் யாதவ் வீசிய 42ஆவது ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.

ஆஸ்திரேலியா அணி 46 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்திருந்த நிலையில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய 9ஆவது சர்வதேச சதத்தை கடந்த நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்கள் என்ற சாதனையையும் படைத்தார். ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்த ஸ்டீவ் ஸ்மித் 15 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது ஷமி வீசிய 48ஆவது ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன்பிறகு களமிறங்கிய டர்னர், கம்மின்ஸ் ஷமியின் பந்துவீச்சில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். 300 ரன்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்தது.

இந்தியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் முகமது ஷமி. அத்துடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 200ஆவது விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் குறிப்பிடத்தக்கது. ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். சிறப்பாக பந்துவீசிய ஜாஸ்பிரிட் பும்ரா விக்கெட்டுகள் எதுவும் எடுக்கவில்லை என்றாலும், அவர் வீசிய 10 ஓவர்களில் வெறும் 38 ரன்களையே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் போது பந்தை தடுக்க முயன்ற ஷிகர் தவன் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். அவருக்கு பதிலாக சஹால் மாற்று வீரராக களத்தில் இருந்தார்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணி. 5 ஓவர்கள் முடிவில் 38 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றது. ரோஹித் ஷர்மா 25 ரன்கள் மற்றும் கே.எல்.ராகுல் 7 ரன்களுடம் களத்தில் இருக்கிறார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.