ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவோம்!

பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை எனில் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என தபெதிக அறிவித்துள்ளது.


கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலம் நகரில் ராமர், சீதா ஆகிய இந்துக் கடவுளர்களின் நிர்வாண படங்களை பெரியார் ஊர்வலமாக எடுத்துச் சென்று செருப்பால் அடித்ததாக பேசினார். இது உண்மைக்கு மாறான தவறான தகவல் என்று எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ரஜினி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின.

மேலும், தவறான தகவலை பரப்பி பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை திருவல்லிக்கேணி, சேலம், ஈரோடு, மேட்டூர், புதுக்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களிலும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “ரஜினிகாந்த் அந்த ஊர்வலத்தின் சிறு பகுதியை மட்டும்தான் கூறியுள்ளார். ஆனால், திராவிடர் கழகத்தினர் காவல் துறையில் பொய்ப் புகார் அளிக்கிறார்கள். அதன்மூலம் ரஜினிகாந்தை மிரட்டலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், சட்டப்படி ரஜினி மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் இன்று (ஜனவரி 19) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தந்தை பெரியார் அவர்கள் ராமன் சீதை உருவங்களை நிர்வாணமாக கொண்டுவந்து செருப்பால் அடித்தார் என்று பொய்யான செய்தியை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பரப்பி இருக்கின்றார். இது அப்பட்டமான பொய் செய்தி இதற்காக ரஜினிகாந்த் அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வருகின்ற 23.1.2020 காலை 10 மணிக்கு கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.