பால்மாக்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் முள்தேங்காயிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாம் எண்ணெய் கலக்கப்படுவதாக அந்த நிறுவனங்களின் மீது மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்ற2ம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் பொது மக்களை தெளிவு படுத்தும் வகையிலான செயற்திட்டமொன்றினை சுகாதார அமைச்சுடன் இணைந்து மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவினால் தொற்றாத நோய்கள் ஏற்படும் ஆபத்தான நிலைமை ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது சுகாதார , பால்மாவினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூர்ட்டும் வகையிலான காணொளியொன்று காட்சிப்படுத்தப்பட்டதுடன் , துண்டுப்பிரசூரங்களும் விநியோகிக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க,
குழந்தைகளுக்கு தாய்பால் இன்றியமையாதது என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில் குழந்தைகளுக்கு தாய்பாலை கொடுத்தல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் சில செயன்முறைகளை வகுத்துள்ளது.
அண்மையில் இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் , அதன் செயன்முறைகளை சரிவர கடைப்பிடிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடின முயற்சியின் விளைவாகவே இந்த மட்டத்தை அடைந்து கொள்ள கூடியதாகவிருந்ததாக கூறிய அவர், சுகாதார அமைச்சினால் இது தொடர்பில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதகவும் தெரிவித்துள்ளார்.
அத்தகைய வேலைத்திட்டங்களின் விளைவாகவே, அந்த மட்டத்தை அடையக்கூடியதாகவிருந்தது. பண்டைய காலத்தில் மக்கள் தமது வீடுகளில் உள்ள பசுக்களின் பாலை குடித்தனர். அதன் காரணமாக ஆரோக்கியமாக வாழக்கூடிய நிலைமை காணப்பட்டது.
ஆயினும் மனித நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக பால் மாவினை உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நோய் நிலைமைகள் ஏற்படும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆகவே , பால் மா பாவனையினை குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இளநீர் பயன்பாடும் சிறந்த ஆரோக்கியத்தை தரும். பால் மா அத்தியாவசியமானதொன்றல்ல.
மகாவலி அபிவிருத்தி திட்டம் நீர்வழங்கல் திட்டத்திற்காக மாத்திரம் ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல. மாறாக , பால் உற்பத்தியாளர் , விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலான திட்டமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஊடாக குறித்த திட்டம் சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டாமை கவலை அளிக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜெயசிங்க , அரசாங்க மருத்ததுவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனிருத்த பாதனிய , அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே , உப செயலாளர் வைத்தியர் நவீன் சொய்சா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo