கிளிநொச்சியில் நெல் அறுவடை நிகழ்வு!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று இடம்பெற்றது.


இதன்போது சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் 120 ஏக்கர் நெல் அறுவடை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள கட்டளை அதிகாரி கேணல் அனுர மலந்தெனிய தலைமையில் இடம்பெற்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் பணிப்பிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை சுமார் 120 ஏக்கர்களில் மேற்கொள்ளப்பட்டது,

74 பெண் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நெற்செய்கை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், ஆரம்ப நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்கள திட்டப் பணிப்பாளர் கேணல் விஜயநாயக்க உட்பட வில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.