சுகாதார தொண்டா்களால் யாழ்.மாநகரசபையை முற்றுகை!

பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்து யாழ்.மாநகரசபை சுகாதார தொண்டா்கள் இன்று காலை யாழ்.மாநகரசபையை முற்றுகையிட்டு கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளனர்.


சம்மந்தப்பட்ட தரப்புக்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது விட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவைகள் தாம் கோரியுள்ள நிலையில் ஆனால் நியமனம் வழங்கப்பட்டால் இழுத்தடிக்கும் நிலைமைகள் உள்ளது.

அதேபோல சுகாதார தொழிலாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் கேட்டிருக்கிறோம். எனினும் அதுவும் செய்யப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறோம்.

இந்நிலையில் அவற்றினை நிவர்த்தி செய்யுமாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதும் இதற்கான நடவடிக்கைகளை மாநகர சபை செய்து கொடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரண்மாகவே தாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த அவர்கள் ,ஆகவே எமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான தீர்வுகளை மாநகரசபை வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த விடயங்கள் தொடர்பில் சபை முதல்வர் உள்ளிட்ட சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கையை மாநகரசபை எடுக்க வேண்டும் எனவும் சுகாதார தொண்டா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.