வவுனியாவில் மீண்டும் ஆரம்பமான போராட்டம்!!

வவுனியாவில் பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ள குப்பை மேட்டினை எதிர்த்து அப்பிரதேச மக்கள் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.


வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி கோரி, பிரதேச இஸ்லாமிய மக்களினால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குட்பட்ட குப்பைகள், வைத்தியசாலை கழிவுகள், பாவனையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு வந்து பாதுகாப்பற்ற முறையில் வீசுவதுடன், தீ மூட்டுவதால் வெளியாகும் புகையினால், பல்வேறு சுவாசப் பிரச்சினைகள் மற்றும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை வவுனியா நகரிலிருந்து வாகனங்களில் கொண்டுவரும் கழிவுகளை உள்ளே, அனுமதிக்க மாட்டோம் என தெரிவிக்கும் அவர்கள், தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்தவருடமும் குறித்த மக்களினால் இதே போன்றதொரு ஆர்பாட்டம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் உறுதிமொழிக்கமைய அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த குப்பை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மீண்டும் ஒரு வருடத்திற்கு பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.