வடக்கில் காணிகளை விடுவிக்க விசேடகுழு!

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசம் உள்ள காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு விசேட குழு ஒன்றை அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநா் அலுவலக செய்திகள் தொிவிக்கின்றன.


வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு , யாழ் வயாவிளான் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்றையதினம் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து தமது நிலமீட்பு தொடர்பில் பேசியுள்ளனர்.

இதன்போது கேப்பாபுலவு மக்கள் தமக்கு தாம் வாழ்ந்த பூர்வீக நிலம் வேண்டுமெனக் கோரியதுடன் , அது தொடர்பிலான மகஜரையும் கையளித்தனர்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபாய, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் எதிர்க்கட் சித் தலைவர் ஆகியோருக்குக் கையளிக்குமாறு கோரிய மகஜர்களையும் அவர்கள் ஆளுநரிடம் கையளித்தனர்.

இதன்போது தன்னால் முடிந்த அளவு மக்களின் காணிகளை மீள கையளிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் உறுத்தி அளைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, யாழ்.வயாவிளான் பகுதியைச் சேர்ந்த மக்களும் தமது காணிவிடுவிப்பு தொடர்பில் ஆளுநரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதன்போது வயாவிளான் கிழக்கு ஜே/244 மற்றும் வயாவிளான் மேற்கு ஜே/245 ஆகியவற்றின் ஒருபகுதி மற்றும் பலாலி தெற்கு ஜே/252 முழுமையாகவும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகக் கூறி அவர்கள் ஆவணங்களைக் கையளித்தனர்.

இந்நிலையில் காணி விடுவிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் முகமாக விசேடகுழு ஒன்றினை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக வடஆளுநர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.