டார்கெட் 42: இந்திய அணியின் பெருந்தன்மை!

19 வயதிற்கு உட்பட்டோர்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள இந்திய U19 மற்றும் ஜப்பான் U19 அணிகள் (21.01.2020) மான்காங் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மோதினர். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஜப்பானுக்காக களமிறங்கிய மார்கஸ் மற்றும் நோகுச்சி முதல் 4 ஓவர்களுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 3 முதல் 7 வது வரை களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே ரன்கள் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியம் ஆனார்கள். 22.5 ஓவர்களில் 41 ரன்களுக்கு ஜப்பான் அணி வீரர்கள் ஆல்-அவுட் ஆனார்கள்.

இந்தியாவின் ரவி பிஷ்ணோய் அதிகபட்சமாக 4 விக்கெட், கார்த்திக் 3 விக்கெட், ஆகாஷ் சிங் 2 விக்கெட் மற்றும் வித்யாதர் பட்டில் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

300 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை, இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள், விக்கெட்டுகளை எதுவும் இழக்காமல், 5 ஓவர்களில் அடைந்தார்கள். சிறப்பாக பந்துவீசிய ரவி பிஷ்ணோய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் வீசிய 8 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஜப்பான் அணி இதுவரை கிரிக்கெட் போட்டியில் எந்த ஒரு முன்னனுபவமும் இல்லாத அணி என்பதால் இந்த வெற்றியை, இந்திய அணி வீரர்கள் ஆரவாரமாகக் கொண்டாடவில்லை. அதற்கு பதிலாக ஜப்பான் அணியின் வீரர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு, நல்ல விளையாட்டு வீரர்களுக்கான அடையாளத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதியானது.

இந்திய அணி வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி, நியூஸிலாந்து அணியிடம் பலப்பரீட்சை நடத்தவுள்ளது, இரு அணிகளுக்கிடையேயான இந்த போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.