ஜப்பான் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு தொடர்ந்தும் நிதியுதவி!

வட. மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ச்சியாக நிதி உவிகளை வழங்க முன் வந்துள்ளது.


ஜப்பான் அரசாங்கம் இந்தப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு 630,028 டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கான ஜப்பான் தூதுவரின் உத்தியோகபூர் இல்லத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.