5 கோடி ரூபா பெறுமதியான பொருளுடன் மூவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.


விமான நிலையத்தின் வௌியேறும் நுழைவாயில் பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர்களிடமிருந்து 5 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதானவர்கள் கொழும்பு மற்றும் காலியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.