ஈராக்கில் அமெரிக்கப் படைகளை வெளியேறுமாறு கோரி மாபெரும் போராட்டம்!

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற வலியுறுத்தி போராட்டக்காரர்களால் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.


தமது நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியெறுமாறு ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டத்திலும் பேரணியிலும் ஈடுபட்டனர்.

மேலும், பேரணியில் ஏராளமான சிறுவர்கள் கலந்துகொண்டதுடன், ‘வேண்டாம் அமெரிக்கா’, ‘அமெரிக்காவுக்கு மரணம்’, ‘இஸ்ரேலுக்கு மரணம்’ போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈராக்கில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தால் பாக்தாத் நகரமே முடங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் ஆதில் அப்துல் மஹ்திக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருந்தனர். இந்தப் போராட்டத்தில் 300இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் கையில் எடுத்துள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில் ஈராக் தலைநகரில் ஈரானின் புரட்சிப் படையின் தளபதி சோலெய்மனி அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈராக்கில் அமெரிக்க எதிர்ப்பு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.