நீரிழிவு நோயாளர்களுக்கு ஏற்படும் வாய்க்குழி சம்பந்தமான நோய்கள்!!

நீரிழிவு நோயானது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு நீண்டகால நோயாகும். இந்தக் கட்டுரையானது கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளர்களிடையே ஏற்படும் வாய்க்குழி சம்பந்தமான சிக்கல்களைப் (Complications) பற்றியதாகும்.
பொதுவாக வாய்க்குழி மென்சவ்வே அதிகமாக பாதிப்படைகின்றது. சாதாரணமானவர்களை விட கட்டுப்பாடற்ற நீரிழிவுநோயாளர்களிடையே வாய்க்குழி சம்பந்தமான நோய்கள் பாதிக்கப்படும் வீதம் அதிகமாகும்.

பற்களைதாங்கும் முரசு, என்பு, நாரிழையங்களில் ஏற்படும் அழற்சி (Periodontitis)> (Gingivitis) உமிழ் நீர்சுரப்பு சுரத்தலின் பாதிப்பு, உமிழ் நீர் சுரக்கும் அளவும் தன்மையும்மாறுதல் சுவையில் மாற்றம் ஏற்படுதல், பக்றீரியா, பங்கசுகளின் கிருமித்தாக்கம் என்பன பொதுவாக ஏற்படும் நோய்களாகும்.

மேலும் வாய்க்குழிமென் சவ்வில் காயங்கள் (Oralmucosallessions), வாய்க்குழியில் கிருமி தொற்று (Stomatitis), நாக்கின் மேற்பகுதியில் சிலமாறுதல்கள் (Geographictongue/benignmigratorygl ossaries), நாக்கின்வெடிப்புக்கள் (Fissured tongue), வாய்க் குழிமென் சவ்வில் வெண்மையான பகுதிகள் தோன்றுதல் (Lichenplanus,l ichenoidreactions), கடைவாய் பகுதியில் கிருமித்தாக்கம், காயங்கள் குணமடைவதில் தாமதம், மென்சவ்வின் நரம்பு உணர்ச்சிகளில் பாதிப்பு ஏற்படுதல், பற்சொத்தை, பற்கள் இழந்து போவதற்கான வாய்ப்புக்கள் என்பன நீரிழிவு நோயாளர்களில் ஏற்படுகின்றன.

பற்களை தாங்கும் இழையத்தில் ஏற்படும் கிருமித்தொற்றுக்கு பக்றீரியாவே பிரதானமான காரணமாகும். இது முரசுநார் இழையம்,பல் என்பு என்பவற்றை பாதிக்கும் ஒரு நீண்ட காலநோய் ஆகும். Microflora எனப்படும் நுண் அங்கிகளால் உருவாகும் நச்சுப் பதார்த்தமானது முரசுப் பகுதியில் தாபிதம் (Inflammation) ஏற்பட காரணமாகின்றது.

ஆகவே நாளாந்தம் பற்களில் ஏற்படும் படிவுகள் தூரிகைகள் கொண்டு அகற்றப்படவேண்டும். இவை அகற்றப்படாவிடின் முரசு அழற்சி ஏற்பட்டு பற்களை தாங்கும் இழையத்திற்கும் பற்களுக்கும் இடையே இடைவெளி (Pockets) ஏற்பட்டு பற்களில் இருந்து பற் தாங்கிழையம் விடுபட வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த இடைவெளிகளுள் பக்றீரியாக்களும் நீரிழிவு நோயாளர்களால் ஏற்படும் வாய்க்குழி சம்பந்தமான நோய்கள் வெளிவரும் நச்சுபதார்த்தங்களும் (Toxin) காணப்படுகின்றன.இதனால் அதிகப்படியான கிருமித்தொற்று பற்றாங்கிழையத்தில் ஏற்படுகிறது. இதனால் நாரிழையம், பல் எலும்பு என்பன அழிக்கப்பட்டு பற்களை இழக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. நீரிழிவு நோயாளர்களில் எதிர்ப்புச்சக்தி குறைவடைவதால் நுண்ணங்கிகளின் தாக்கம் அதிகரிக்கின்றது. இதனால் புண்கள் குணமடைவதில் தாமதமும் ஏற்பட்டு பல்தாங்கும் இழையங்கள் கூடுதலாக அழிவடைகின்றன. நீரிழிவு நோயாளிகள் ஏனையவர்களைவிட மூன்று மடங்கு முரசுநோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

உமிழ் நீர்ச்சுரப்பியில் ஏற்படும் பாதிப்பு

சுகாதாரமான வாய்க்குழியை பேணுவதில் உமிழ்நீர்ச் சுரப்பு பெரும் பங்குவகிக்கின்றது. பிரதானமான உமிழ்நீர் சுரப்பிகளாவன கன்னஉமிழ்நீர்ச் சுரப்பி, கீழ்த்தாடை உமிழ்நீர்ச்சுரப்பி, நாக்கீழ் உமிழ்நீர்ச்சுரப்பி இதனைவிட minor salivary glands என்று சொல்லப்படுகின்ற சிறிய உமிழ் நீர்ச் சுரப்பிகளும் வாய்க்குழியில் காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளர்களில் (குறிப்பாக Type2) கன்ன உமிழ்நீர்ச் சுரப்பி பாதிப்பால் உமிழ் நீர்ச்சுரப்பு வீதம் குறை வடைந்து வாய் உலர்தல் ஏற்படுகிறது. இது அதிகமாக Neuropath Diabetes உள்ள நோயாளர்களிடையே காணப்படுகிறது. வாய் உலர்தலினால் அடிக்கடிநீர் அருந்துவதனால் அதிகம் சிறுநீர் கழிக்க நேர்கின்றது.

தொடர்ச்சியான வாய் உலர்தலினால் வாய்க்குழி மென்சவ்வில் உராய்வுகள் ஏற்பட்டு கிருமித் தொற்றும் வலியும் ஏற்பட்டு வாய்க்குழியின் நடுநிலைத் தன்மை பாதிப்படைந்து பற்சொத்தை (Sialosis) நீரிழிவு நோயாளர்களிடையே அதிகம் காணப்படுகின்றது.

சுவை மாற்றம்

அனுசேபத்திலும் அகச்சுரப்பிகளிலும் உமிழ்நீர்ச்சுரப்பிகளிலும் ஏற்படும் மாறுதலானது சுவை உணர்ச்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு நோயாளர்களிடையே Taste Threshold அதிகமாகக் காணப்படுவதால் சுவை உணர்வதில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனால் உணவுக்கட்டுப்பாடு பேண இயலாமை ஏற்படுகின்றது.

வாய்க்குழி கிருமித்தொற்று

Candia albicans எனப்படும் பங்கசு தொற்று கன்னங்கள், நாக்கு,முரசு, அண்ணம் என்பனவற்றில் அடிக்கடி ஏற்படுகின்றது. பக்றீரியாக்களின் தொற்றானது எதிர்ப்பு சக்தி குறைவானவர்களிலே கூடுதலாகக் காணப்படுகின்றது.Deep neck infection முகத்தாடை இடை வெளிகளில் கிருமித்தொற்று (Maxill ofecialspace infection of odood ntonenicorigin) என்பன நீண்ட காலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

பங்கசு தொற்று அல்லாத வாய்க்குழி நோய்

நீரிழிவு நோயாளர்களில் நாக்கில் ஏற்படும் வெடிப்புகள் (Fissued tonge Irritation Fibroma) என்பன பங்கசு தொற்றல்லாத நோய்களாகும்.

வாய்ப்புண் குணமடைவதில் தாமதம்

நீரிழிவு நோயாளிகளில் புதிய குருதிக்குழாய்கள் உருவாவதில் தாமதமும் குருதிவழங்கலில் பாதிப்பும் ஏற்பட்டு எதிர்ப்புசக்தி வளர்ச்சி காரணிகள் என்பன குறைவடைகின்றன. இதனால் வாய்க்குழியில் ஏற்படும் புண்கள் சத்திரசிகிச்சையின் பின்காயங்கள் குணமடைதல் என்பன பாதிக்கப்படுகின்றன.

வாய்க்குழி மென்சவ்வில் ஏற்படும் நோய்கள் (Oral Mucosal diseases)

அடிக்கடி வாயில் புண்கள் (Recur rent aphthousstomatis) Lichen plans என்பன பொதுவாக நீரிழிவு நோயாளர்களில் ஏற்படுகின்றது. வாய்க்குழி மென்சவ்வில் ஏற்படும் Lichamplanus ஆனது தோலுடன் சம்பந்தமான ஒரு நோயாகும். இது கூடுதலாக Type 1 நீரிழிவு நோயா ளர்களிடையே காணப்படுகின்றது.

இது ஒரு (Auto immune mechanism) Artopicerrosoive oral lichen planus அதிகமாக இந் நோயாளர்களில் காணப்படும்.

வாயில் ஏற்படும் உணர்ச்சி பாதிப்புக்கள் (Neuro sensory oral disorders)

Burning mouth syndrome எனப்படுகின்ற வாய் எரிவு நோயானது வலிமிக்க நோயாகும். இது அண்ணம், நாக்கு, தொண்டை, முரசு எல்லாவற்றையும் பாதிக்கின்றது. இதனோடு வித்தியாசமான உணர்வானது கூச்சம், விறைப்புத் தன்மை, வாய் உலர்தல், (Sore mouth) என்பனவும் ஏற்படுகின்றன. இது diabetes neuropathy உள்ள நோயாளர்களிடையே அதிகம் காணப்படுகிறது.

வாய்க்குழி சம்பந்தமான பிரச்சினைகள் கூடுதலாக கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளர்களில் அதிகம் ஏற்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யக் கீழ்வரும் நற்சுகாதாரப் பழக்கவழக்கங்கள் முக்கியமானவை ஆகும்.

பற்சுகாதாரத்தை நன்கு பேணுதல்.
ஒழுங்கான வைத்திய ஆலோசனையும் சிகிச்சையும் பெறல்.
கட்டுப்பாடான உணவுப் பழக்கவழக்கங்களை பேணுதல்.
நன்கு உடற்பயிற்சி செய்தல்.
மன அழுத்தமுள்ளவர்கள் உளவளத்துணை அல்லது சிகிச்சைபெறல்.
யோகாசனம், தியானம் என்பன ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்தும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.