பெண் பார்க்கும் படலம்... !

தனியா போய் பேசுங்க என சொன்னதற்கு அந்த பையன் பேசினது.. 


நான் : சொல்லுங்க சார்..

பையன் : ஒரு சின்ன சிரிப்புடன்... நான் ஒரு சைகோ... அப்புறம் கொஞ்சம் அதிகமாக கோப படுவேன்...

நான் : சரிங்க... அப்புறம் இந்த கையை கட் பண்ணுவது, காலை வெட்டுவது, கொலை பண்ணுறது இது போல் வேற எதும் இருக்கா???

பையன்: ஐயோ அவோளோ டெரர் இல்ல...

நான் : எங்க வீட்டுல பொழுது போகல... அதான் கல்யாணம் பண்ணி அடி வாங்க உங்ககிட்ட அனுப்புறாங்க.. 

பையன் : அப்படி இல்ல..  நீங்க சைக்கலஜிஸ்ட்... சரியா என் உணர்வை புரிந்து ஹாண்டுல் பண்ணுவீங்க... அப்புறம் ஆண்கள் கிட்ட பேசாதீங்க..  எல்லாம் பொறுக்கி பசங்க..

நான் : ஆமா உங்ககிட்ட கூட பேச விட்டது தப்பு தான்... அதோட எங்க வீட்டுல என்னைய ஹேண்டுல் பண்ண தெரியாம தான் உங்ககிட்ட என்னைய கல்யாணம் பண்ண முடிவு செய்து இருக்காங்க...

இன்னைக்கு செலவு 2000 ரூபாய்... கொஞ்சம் அக்கவுண்ட்ல போட்டு விடுங்க..

பையன் : முகம் ஒரு மாதிரி மாறி சாரி... பெரியவங்க பேசட்டும்...

நான் : அட பாவிகளா... குடிகாரன் போய் இப்ப சைகோவ திருத்த வேண்டும் என்று வாராங்க...

முடியல 😂😂😂...

நான் எதோ ஜாலியா படிச்சுட்டு, சுத்திட்டு இருக்கேன்... அது பொறுக்கல...
Blogger இயக்குவது.