இன்று அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்!

அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.


இன்று நண்பகல் 1.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது உயர் நீதிமன்ற நீதியரசராக பரிந்துரை செய்யப்பட்டுள்ள நீதியரசர் யசந்த கோட்டாகொடவின் நியமனம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்ட கோட்டாகொட தற்போது உயர் நீதிமன்ற நீதியரசராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரின் இடத்துக்கு புதிய ஒருவரை நியமிக்கும் வரை நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.