52 பணிப்பெண்கள் குவைத்திலிருந்து நாடு திரும்பினர்!

குவைத்திற்கு தொழில் நிமித்தம் சென்று அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 52 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப்பேச்சாளருமான ஜகத் படுகெதர தெரிவித்துள்ளார்.


அவர்கள் அனைவரும் நேற்று இரவு 10.15 மணியளவில் யூஎல்- 230 என்ற விமான சேவையூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில் சகல சட்ட நடவடிக்கைகளும் பூர்த்தியானதையடுத்து ,இன்று அதிகாலை 6.15 மணியளவில் வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்களது முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் இடம் பெற்றன.

உரிய முறையில் ஊதியம் வழங்கப்படாமை , சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தமை , துன்புறுத்தல்களுக்கு உள்ளானமை மற்றும் நாட்டின் விதிமுறைகளை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட காரணங்களின் காரணமாகவே, அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதுடன், பாதிகப்பட்ட பெண்களில் சிலருக்கு தமது வீடுகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து உதவியையும் வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளது.

அதேவேளை, அவர்கள் அளித்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள வேலைவாய்ப்பு பணியகம் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.