புதிய விமானங்களும், விமான சேவை பாதிப்பும்!

சேலம் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம்  (ஜனவரி 24) சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடந்தது. அந்தந்த நாடாளுமன்ற தொகுதியின் எம்பிதான், விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவர் என்ற முறையில், சேலம் எம்.பி. பார்த்திபன் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.



இக்கூட்டத்தில், சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாயிகள் பாதிப்படையாத வண்ணம் நிலம் கையகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவது பற்றியும் , சேலத்தில் இருந்து இரவு நேர விமான சேவை துவங்குவதற்கான முயற்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் பார்த்திபன் எம்பி,

“வரும் ஏப்ரல் முதல் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு விமான சேவையும், புதுச்சேரியில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு விமான சேவையும் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது தவிர சேலத்தில் இருந்து திருப்பதி வழியாக ஹைதராபாத்துக்கும் சேலத்தில் இருந்து கொச்சிக்கும், சேலத்தில் இருந்து ஹைதராபாத் அல்லது சென்னை வழியாக சீரடிக்கும் விமான சேவை துவங்கவும் முயற்சிகள் தீவிரமாக்கப்படும். சேலத்தில் இருந்து மங்களூர் வழியாக சுற்றுலாத்தலமான கோவாவுக்கும் விமான சேவை பற்றியும் விவாதித்தோம்” என்று கூறினார்.

சேலத்தில் இருந்து புதிய விமானங்கள் பற்றிய அறிவிப்புகள் வந்திருக்கும் நிலையில் சேலம் விமான நிலையத்தில் இருந்து கடந்த மூன்று தினங்களாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாக பயணிகள் புலம்புகிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சேலத்துக்கு விமானம் மூலமே வருகிறார்.

இந்த நிலையில் . கடந்த, 21 ஆம் தேதி , தொழில்நுட்பக் கோளாறால் சென்னை- சேலம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலத்தில் பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. கோளாறு சரியாகாததால், மூன்றாவது நாளாக விமான சேவை ரத்தானது. விமானத்தின் உதிரி பாகம், வெளிநாடுகளிலிருந்து வரப்பெற்று சரி செய்யும் பணி நடப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். வரும் 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால், பாதுகாப்பு காரணமாக சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி, ஜனவரி 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.