படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.


மட்டக்களப்பு- காந்தி பூங்காவில் அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவு தூபியில் இன்று (சனிக்கிழமை) பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டு.மாநகரசபை மேஜர் தி.சரவணபவான், பிரதி மேஜர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன், ஊடகவியலாளர்கள், இலங்கை மக்கள் தேசிய கட்சி தலைவர் நா.விஷ்ணுகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இதில் கலந்து கொண்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபிக்கு முன்னால் அவரின் திருவுருவப்படத்தை வைத்து, அதற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்

கடந்த 2006 ஆம் ஆண்டில் உயர்தரக் கல்வியை முடித்துவிட்டு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை- நிலாவெளி கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.

மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கப்பட்டபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் அரசுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரும் அழுத்தங்களும் ஏற்பட்டன.

இந்நிலையிலேயே  2006 ஜனவரி 24 ஆந் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுகிர்தராஜன், சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.