கனடிய உச்ச நீதிமன்றம் 3 தமிழர்களை விடுதலை செய்தது!!

நூற்றுக்கணக்கான தமிழ் குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு 2010 இல் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் சண் சீ கப்பல் வந்த பின்னர் மனித கடத்தல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட மூவரை விடுவிப்பதை கனடாவின் உச்ச நீதிமன்றம் திறம்பட உறுதி செய்துள்ளது.


இம் மனித கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூன்று தமிழர்கள் தொடர்பான மேன்முறையீட்டை விசாரணை செய்யப்போவதில்லையெனக் கனடிய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் வெளியான முடிவில் மேன்முறையீட்டு விசாரணை விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

2010ம் ஆண்டு சண் சீ கப்பலில் கனடாவை வந்தடைந்த தமிழ் அகதிக் கோரிக்கையாளர்கள் கனடாவை வந்தடைந்தமை தொடர்பான வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் அல்லவென நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மூன்று தமிழர்கள் தொடர்பான மேன்முறையீட்டையே விசாரணை செய்யப்போவதில்லையெனக் கனடிய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரத்தினம் ஆகியோரே இந்த மூன்று தமிழர்களாவர்.

இவர்கள் மீது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.