டாணா - திரைவிமர்சனம்!!

சில ஹீரோக்களிடமிருந்து கலகலப்பான படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அப்படியான ஒருவர் நடிகர் வைபவ். சென்னை 28 படத்தை தொடர்ந்து அவர் இதை தக்கவைத்து வருகிறார். அவ்வகையில் தற்போது டாணா படம் அவருக்கு வெளியாகியுள்ளது.


ஹீரோ வைபவ் பின் குடும்ப பின்னணி சரித்திர கதை கொண்டது. ஆங்கிலேய ஆட்சியின் போது போலிஸ் துறை ஏற்படுத்தப்பட்டு முதன் முதலாக போலிஸானது இந்த டாணா குடும்பம் தான். இதற்கு ஒரு பெரும் ஃபிளாஷ்பேக் இருக்கிறது.

அந்த பரம்பரையில் வந்த வைபவையும் போலிஸ் ஆக்க வேண்டும் என்பது குடும்பத்தினரின் ஆசை. ஆனால் அவருக்கோ இளம் வயதிலிருந்தே ஒரு பிரச்சனை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அவர் போலிஸாக கூடாது என வைராக்கியமாக இருக்கிறார்.

இதற்கிடையில் இவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு அரசங்கத்தால் பிரச்சனை வருகிறது. இதில் உயிர்பலி நிகழ்கிறது. அந்த வேளையில் தன் வைராக்கியத்தை மாற்றிக்கொள்கிறார் வைபவ். ஆனாலும் அவர் போலிஸ் ஆவதை தடுக்கு ஒரு செக் வைக்கப்படுகிறது.

இதற்கிடையில் ஊரில் ஆதரவற்றவர்களாக சொத்துக்களுடன் இருப்பவர்களை குறிவைத்து கொலை செய்து சொத்துக்களை அபகரிக்கும் சதி வேலை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் தனக்கு தெரிந்த ஒருவரையும் இழக்கிறார் வைபவ். இப்படியான கொலைப்பின்னணியில் இருப்பவர் யார் என ஹீரோ தன் வேட்டையை தொடங்க, குற்றவாளி யார், வைபவுக்கு அப்படி என்ன பிரச்சனை, இறுதியில் போலிஸ் ஆனாரா என்பதே இந்த டாணா.


ஹீரோ வைபவ் ஏற்கனவே சொல்லப்பட்டது போல கலக்கலான ஆக்‌ஷன் நிறைந்த போலிஸாக இப்படத்தில் இறங்கியுள்ளார். அவரின் கதை தேர்வு ஓகே தான். ஆனாலும் வேறு மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்பதே எல்லோரின் எண்ணம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.