கொழும்பு பிரதான வீதியில் மற்றொரு விபத்து!!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவல கெரோலினா தோட்டப் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பேர் படுகாயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்ட பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து டயகம நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டியானது இன்று அதிகாலை 3 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

அத்தோடு இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட அதில் பயணித்த மூன்று பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.