இலங்கையின் இரு சாதனைப் பெண்களுக்கு பத்மஸ்ரீ விருது!

இலங்கையின் இரு சாதனைப் பெண்களான தேசபந்து டாக்டர்.வஜிர சித்ரசேனா மற்றும் மறைந்த பேராசிரியை இந்திரா தசநாயக்கே ஆகியோருக்கு இந்தியா பத்மஶ்ரீ விருது வழங்கி கெளரவிப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


இந்திய இலங்கை உறவை வலுவாக்குதல் மற்றும் தமது தனிப்பட்ட துறைகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்கி முன்னோடிகளாக செயற்பட்ட இலங்கையை சேர்ந்த தேசபந்து டாக்டர்.வஜிர சித்ரசேனா மற்றும் மறைந்த பேராசிரியை இந்திரா தசநாயக்கே ஆகியோருக்கு இந்தியாவின் 71 ஆவது குடியரசு அரசாங்கம் பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கிறது.

பத்மஶ்ரீ விருது இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது உயர் குடியியல் விருதாக காணப்படும் அதேநேரம் பிரதமரால் ஒவ்வொரு வருடமும் நியமிக்கப்படும் பத்ம விருதுகள் சபையினால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

பொதுச்சேவைக்கான கூறொன்று காணப்படும் சகல செயற்பாட்டு தளங்கள் அல்லது துறைகளில் எட்டப்படும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

டாக்டர் வஜிர சித்ரசேனா இலங்கை நடனத்துறையில் ஒரு வாழும் வரலாறாக போற்றப்படுவதுடன்பாலே நடனத்தில் புகழ்பெற்ற இலங்கையின் முதலாவது நடனக் கலைஞரும் கண்டிய நடனத்தை தனது முழுநேர தொழிலாக கொண்டிருக்கும் முதலாவது சிங்கள பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது கலைப்பயணம் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் அதேநேரம் 87 வயதிலும் சித்ரசேனா – வஜிரா நடன நிறுவனத்தின் தலைவராகவும் நடனப் பாடாசாலையின் அதிபராகவும் அவர் கடமையாற்றுகிறார்.

நிபுணத்துவமிக்க நடனத்துக்கு அப்பால் அவரது வாழ்வின் அர்ப்பணிப்பு கடந்து செல்கிறது. இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் நடனக் கற்பித்தல் முறைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட குருவாகவும் அவர் பதிவாகியுள்ளார்.

பன்முக ஆளுமையை கொண்ட அவர் நட்டுவாங்கம், தயாரிப்பு, நெறியாழ்கை மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் நிபுணத்துவமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

இலங்கையின் அதி உயர் விருதான தேசபந்து உள்ளிட்ட பல விருதுகளால் கௌரவிக்கப்பட்ட டாக்டர் வஜிர நடன அரங்கேற்றங்கள் மூலமாகவும் குறிப்பாக கண்டிய நடனம் மற்றும் ஒடிசி நடன வடிவங்கள் உள்ளிட்ட நடனங்கள் கலந்த ஆற்றுகைகள் மூலமாகவும் இந்திய இலங்கை உறவு மேலும் வலுவடைவதற்கு தனித்துவமான பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

1959 முதல் 1998 வரையான காலப்பகுதிக்குள் தமது சித்ரசேனா நடன குழுவுடன் அவரும் அவரது குருவும் கணவருமான சித்ரசேனாவும் இந்தியாவுக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

2003 இல் இவர்களின் வருகையை அடுத்து ஒடிசி நடன அமைப்பான நிருத்யக்ரம் மற்றும் சித்ரசேனா நடனக் குழு இணைந்து தயாரித்த “சம்ஹாரா’’ இந்தியா இலங்கை அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் பரந்த வரவேற்பை பெற்றிருந்ததுடன் சித்ரசேனா மற்றும் வஜிரா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்தியாவுடனான உறவு இரு நடனங்களினதும் ஒன்றிணைவின் மூலம் மேலும் செழுமையடைந்ததுடன் உச்சத்தை எட்டியது.

ஆண்களின் வகிபாகத்தை கொண்டதும் கிராமிய பண்புகளை கொண்டதுமான கண்டிய நடனத்தை முற்றிலும் உணர்வு ரீதியான ஒடிசி நடனத்துடன் கலந்த நிலையிலும் இரு நடனங்களினதும் பண்புகளை பேணியமைக்காக மிகுந்த பாராட்டை பெற்றிருந்த இந்த நெறியாழ்கை விமர்சகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

2020 இல் பத்மஶ்ரீ விருதினைப் பெறும் மற்றொருவரான மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்காகளனி பல்கலைக் கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக கடமை புரிந்துள்ளார். 1943 இல் இந்தியாவில் பிறந்த அவர் லக்னோ பல்கலைக்கழகத்தில பயின்றுள்ளார்.

இலங்கை கல்வி நிறுவனங்கள் மத்தியில் ஹிந்தியை அறிமுகம் செய்து மேம்படுத்திய பேராசிரியர் தசநாயக்கே,1975 ஆம் ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற முதலாவது உலக ஹிந்தி மாநாட்டில் பங்குகொள்வதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார்.

1995இல் களனி பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பிரிவினை மீள ஆரம்பிப்பதற்கு பேராசிரியர் தசநாயக்கே முக்கிய காரணியாக இருந்துள்ளதுடன் அவரது முயற்சியின் காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் ஹிந்தி திணைக்களம் இலங்கையில் ஹிந்தி கற்கைகளுக்கான பாரிய நிலையமாக மாறியது.

அவரது முயற்சியால் இன்று ஆறு பாரிய பல்கலைக்கழகங்களுக்கு புறம்பாக இலங்கையில் 80 நிலையங்கள் மற்றும் பாடசாலைகளில் ஹிந்தி தற்போதுகற்பிக்கப்பட்டு வருகின்றது.

பேராசிரியர் தசநாயக்கவின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் 2007 டிசம்பர் 18ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்ற உலக ஹிந்தி மாநாட்டில் அவருக்கு 2005க்கான ‘’டாக்டர் ஜோர்ஜ் க்ரீஎர்சன் ஹிந்தி செவி சமன் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அவரது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் வாழ்ந்து வந்த நிலையில் மிகவும் கவலைதரும் விடயமாக 2019 செப்டம்பரில் கொழும்பில் அவர் காலமானார்.

முன்னர் இலங்கையின் பிரபல இசைக்கலைஞரும் மக்சாய்சாய் விருது பெற்றவருமான டபிள்யூ டி அமரதேவாவுக்கு இலங்கை-இந்திய இசை உறவுகளை வலுவாக்கும் செயற்பாடுகளில் பங்களிப்பினை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கம் 2002 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.