அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்- நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.


ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுவரும் இத்தொடரில் தற்போது நான்காவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சரி தற்போது நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் கர்பீன் முகுருசாவும், நெதர்லாந்தின் கிகி பெர்டன்சும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் கர்பீன் முகுருசா, வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

…………

இன்னொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், எஸ்டானியோவின் அனெட் கொன்டாவிட்டும் , போலந்தின் இகா ஸ்வியாடக்கும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-7, 7-5, 7-5 என்ற செட் கணக்குகளில் அனெட் கொன்டாவிட் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
…………..

மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப்பும், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ்சும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் சிமோனா ஹெலப் வெற்றிபபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்

…………..

இன்னொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும், ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவும் மோதினர்.

எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், 6-7, 7-6, 6-2 என்ற செட் கணக்குகளில் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவா வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

………………………………………

ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் ஸ்டென் வவ்ரிங்காவும், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வும் பலப்பரீட்சை நடத்தின.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 2-6, 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்குகளில் ஸ்டென் வவ்ரிங்கா போராடி வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
…………..

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேமும், பிரான்ஸின் கல் மொன்பில்சும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் டோமினிக் தியேம், வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

……………
மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வும், ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ்வும் மோதினர்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.