ஹோலகாஸ்ட் இன் 75ஆவது ஆண்டு நினைவு தினம்!

வரலாற்றில் கரும் புள்ளியாக உள்ள ஹோலகாஸ்ட் நினைவு தினத்தின் 75ஆவது ஆண்டு நினைவு தினம் உலக நாடுகள் பலவற்றில் அனுசரிக்கப்படுகிறது.


ஜேர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரால் இரண்டாம் உலக போரில் யூதர்கள் திட்டமிட்டு இனபடுகொலை செய்யப்பட்ட நிகழ்வை குறிப்பதை ஹோலோகாஸ்ட் என்கிறோம்.

இந்த நிலையில் இன்றைய தினம் மாண்டவர்களுக்கு இஸ்ரேல் மற்றும் யூதர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நெதர்லாந்து, போலந்து ஆகிய நாட்டு தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும், உலக நாடுகளின் தலைவர்கள் சிலரும் ஹோலகாஸ்ட் நினைவு தினத்தை தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜேர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனை சோகா என்றும் குறிப்பர். இது அக்காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் (நாஸி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது.

யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர்

மற்றும் சோவியத் போர் கைதிகள், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள், யூஹோவா சாட்சியாளர் என்போரும் அடங்குவர்.

நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.