கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கை இடைநிறுத்த ஆலோசனை!

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் கொமடோர் டி.கே.பி.தஸநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கினை இடைநிறுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பில் வைத்து 11 இளைஞர்களை கடத்திச் சென்று தடுத்து வைத்து அவர்களை கொலை செய்ததாக முன்னாள் கடற்படை தளபதி மற்றும் 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாதிப்புக்கள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவே சட்டமா அதிபருக்கு இந்த தகவலை வழங்கியுள்ளது.

அந்தவகையில் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணைகள் முடிவடையும் வரை சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னரான அரச ஊழியர்களுக்கு எதிரான பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய 3 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

குறித்த ஆணைக்குழு தனது அறிக்கையை 6 மாதங்களுக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.