காணி தகராறால் பறிபோனது தாயின் உயிர்-மருமகன், மகள் காயம்!!
நீண்டகாலமாக இடம்பெற்று வந்த காணிப்பிரச்சினையால் ஏற்பட்ட முறுகல் நிலையடைந்ததையடுத்து இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயேபலியானதுடன் மேலுமிருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம்,பிபிலைப்பகுதியின் பிட்டகும்பர என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
பிட்டகும்பரையைச்சேர்ந்த ஜே.பி. தயானிவயலட் என்ற 38 வயது நிரம்பிய ஆறுபிள்ளைகளின் தாயே துப்பாக்கிப் பிரயோகத்தில்ஸ்தலத்தில் பலியானவராவார்.
பலியான பெண்ணின் மருமகனான இந்திக்க சமரவீர, அவரின் மகள் வத்சலா நிமேசினிஆகிய இருவரும் கடுங்காயங்களுடன் மொனராகலை மற்றும் பிபிலை அரசினர் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை பிபிலைநீதிவான் நீதிமன்ற நீதிபதி புவனக்க ராஜகருண ஸ்தலத்திலேயே மேற்கொண்டதுடன் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட நபரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
இவ்வுத்தரவினையடுத்து,மறைந்திருந்த நபரை கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியுடன் பொலிசார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர்.
விசாரணையின் போது நீண்டகாலமாக இருந்துவந்த காணிப்பிரச்சினை உக்கிரமடைந்ததினாலேயே, மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப்பிரயோகம்மேற்கொண்ட நபர், பலியான பெண் மற்றும் படுகாயமுற்றஇருவர் அடங்கிய குடும்பத்தின் தலைவர் என்பதும், ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம்தொடர்பில் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo