ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்த ஒலிம்பிக் வீரர்! மனோ கணேசன் கவலை!!

கூடைப்பந்து சாம்பியனும் ஒலிம்பிக் வீரருமான கோப் பிரையண்ட் மற்றும் அவரது மகள் ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவிற்கு முன்னாள் அமைச்சர் மானோ கணேசன் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஹெலிகப்டர் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த போது, லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொருறுங்கி வெடித்துச் சிதறியது.

அந்தச் சம்பவத்தில் அவரும் அவருடன் பயணித்த மகள் உட்பட 4 பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ்தை அறிந்து அங்கு விரைந்த அவசரகால மீட்புக் குழுவினர், ஹெலிகப்டரில் மூண்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அவர்களால் பயணிகள் எவரையும் காப்பாற்ற முடியவில்லை.

கோப் பிராயன்ட்டின் மனைவி மற்றும் 4 மகள்களுடன் வாழ்ந்து வந்தவர். அவருக்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம், கடைசி மகள் பிறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Blogger இயக்குவது.