இன்று ஹுவாவி மீதான தடை குறித்து முடிவு!!

பிரித்தானிய 5G வலையமைப்பில் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவியின் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கலாமா என்பது குறித்து பிரித்தானிய அரசாங்கம் நாளை செவ்வாய்க்கிழமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் பிரித்தானியா, சீன தொழில்நுட்பத்தில் இருந்து விலக வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்துகின்றது.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாளை செவ்வாய்க்கிழமை தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். அந்தக் கூட்டத்தில் ஹுவாவி குறித்து முடிவு எடுக்கப்படும். எனினும் எடுக்கப்பட்ட முடிவு உடனடியாக அறிவிக்கப்படாது என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை 5G வலையமைப்பின் முக்கிய பகுதிகளிலிருந்து மட்டுமே ஹுவாவியைத் தடைசெய்யலாம் என்று ஊகங்கள் உள்ளன.

சீன நிறுவனமான ஹுவாவியைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து, அமெரிக்கக்குழு ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு புதிய ஆதாரங்களை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு, தேசிய பாதுகாப்புத் தொடர்பான விடயங்களைச் சுட்டிக்காட்டி, ஹுவாவி மற்றும் அதனோடு தொடர்புடைய 68 நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களை விற்க அமெரிக்கா தடைவிதித்தது.

ஹுவாவியின் எந்தவொரு பயன்பாடும் உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்வதற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா ஏற்கனேவே எச்சரித்திருந்தது.

ஐந்தாவது தலைமுறை மொபைல் இணைய வலையமைப்பானது மிக விரைவான தரவுப் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம்,பரந்த பாதுகாப்பு மற்றும் நிலையான இணைப்புகளை வழங்குகின்றது.

ரேடியோ ஸ்பெக்ட்ரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் இது செயற்படுகிறது.

பிரித்தானியாவில் உள்ள Three, 02, EE, (BT இன் துணை நிறுவனம்), Vodafone ஆகிய நான்கு மொபைல் நிறுவனங்கள் 5G வலையமைப்பைக் கொண்டுள்ளன.

நாளையதினம் ஹுவாவி மீதான தடைக்கு அனுமதி அளிக்கப்பட்டால் இத்தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஹுவாவி உபகரணங்களை அகற்றவேண்டிய நிலை ஏற்படும்.

இதேவேளை பிரித்தானியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் 15 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஹுவாவி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று  கூறியிருந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.