பெண்ணியம் என்றால் என்ன!!
வேண்டும், வேண்டாம் என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் நீங்கள்தான். ஆனால் அதற்கு முன்பு, பெண்ணியம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டால் விதவிதமான விளக்கங்கள் கிடைக்கின்றன.
'நானும் படித்தவள்தான். காலம் காலமாகப் பெண்கள் எப்படியெல்லாம் கசக்கி பிழியப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கும் தெரியும். உடலளவிலும் மனத்தளவிலும் கொடூரமான வதைகளை அனுபவித்துவரும் ஒரு சிலரை எனக்குத் தனிப்பட்ட முறையிலும் தெரியும். இருந்தும் நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். நான் ஒரு பெண்ணியவாதி அல்ல. அப்படி மாறும் விருப்பமும் இல்லை...'
இப்படிச் சொல்லும் பலரை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்கிறார்கள் கமலா பசீன், நிகாத் சையத் கான் இருவரும். கமலா ராஜஸ்தானைச் சேர்ந்த கவிஞர் என்றால், நிகாத் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆய்வாளர். இருவரும் பெண்ணியவாதிகள், இருவருமே செயற்பாட்டாளர்கள். ஏன் பெண்ணியம் என்றாலே சில பெண்கள் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள் என்பது குறித்து இருவரும் இணைந்து நடத்திய உரையாடலை (Feminism in India) மைத்ரேயி சவுத்திரி தொகுத்தளித்திருக்கிறார்.
இந்தியாவில் மட்டுமல்ல; மேலை நாடுகளிலுமேகூட பெண்ணியம் குறித்து பெண்களிடையே பலவிதமான குழப்பங்கள் நிலவுகின்றன என்கிறார்கள் இருவரும். இந்தக் குழப்பங்கள் ஒருவிதமான அயர்ச்சியையும் வெறுப்பையும் அச்சொல்லின்மீது அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. எனவே பெண்ணியம் பற்றிய விவாதங்களிலிருந்து அவர்கள் கவனமாக ஒதுங்கி நிற்கிறார்கள். எனக்குப் பெண்ணியத்தின்மீது நம்பிக்கை இல்லை என்றோ, பெண்ணியம் தோல்வி யடைந்த கோட்பாடு என்றோ, பெண்ணியம் இந்தியாவுக்கானது அல்ல என்றோ அவர்கள் அறிவிக்கும்போது அந்த அறிவிப்பிலுள்ள மையமான செய்தி ஒன்றுதான். அது ஒரு மோசமான கோட்பாடு. எனக்கு அது வேண்டாம்!
ஒரு பெண்ணாக இருக்கும் ஒரே காரணத்துக்காக குடும்பம், பணியிடம், சமூகம் என்று எல்லா இடங்களிலும் நான் ஒடுக்கப்படுகிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
வேண்டும், வேண்டாம் என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் நீங்கள்தான். ஆனால் அதற்கு முன்பு, பெண்ணியம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டால் விதவிதமான விளக்கங்கள் கிடைக்கின்றன. ஆண்களை வெறுப்பது... நவீன உடைகள் அணிந்துகொள்வது... மேற்கத்திய பண்பாட்டை வரித்துக்கொள்வது... கட்டற்ற பாலுறவு... குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று வலியுறுத்துவது... குடும்பம் என்னும் அமைப்பை அடித்து நொறுக்குவது... நாத்திகராக மாறுவது... இதுதான் பெண்ணியம் என்று எந்தெந்த சிந்தனையாளர்கள் சொல்லி யிருக்கிறார்கள் என்று கேட்டால் சினிமாவில் வருகிறது என்றோ, பத்திரிகையில் படித்தேன் என்றோ பேசிக்கொள்கிறார்கள் என்றோதான் பதில் வரும்.
பெண்ணியவாதிகள் ஆண்களை வெறுப்பதில்லை. பெண்ணியவாதிகள் காதலிக்கிறார்கள். திருமணம் செய்துகொள்கிறார்கள். குடும்பத்தை நொறுக்குவதில்லை. குழந்தைகளை வளர்க்கிறார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். நீங்கள் எந்தப் பண்பாட்டு வேரை மதிக்கிறீர்களோ, அதை மதிக்கிறார்கள். மேற்கத்திய உடைகள்தாம் வேண்டும் என்று சொல்வதில்லை. ஆண்களை வெறுப்பதில்லை. இப்படி இருக்கும் பலரை என்னால் காட்ட முடியும் என்று நீங்கள் விளக்கினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வது சந்தேகமே. ஏன் இப்படி நடக்கிறது என்று யோசிக்கும்போது நாங்கள் கண்டடைந்த ஓர் எளிய உண்மை, பெண்ணியம் பற்றி தவறான எண்ணம் பரவியிருக்கும் அளவுக்குச் சரியான எண்ணம் பரவியிருக்கவில்லை என்பதுதான். ஆகவே, அங்கிருந்து எங்கள் உரையாடலைத் தொடங்குகிறோம்.
சூழலுக்கேற்ற பெண்ணியம்.
தேவைகளுக்கு ஏற்ற பெண்ணியம். 17-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கும் நம் காலத் தேவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளே அப்போதைய பெண்ணியத்துக்கும் இப்போதைய பெண்ணியத்துக்குமான வேறுபாடுகளாகவும் இருக்கின்றன. நாம் கேள்விகளை மாற்றி மாற்றிப் போடும்போது விடைகள் வேறு வேறாக வருவதுபோல, பெண்ணியமும் காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப புதிய புதிய வடிவங்களை எடுத்துக்கொண்டே வருகிறது.
கல்வி கற்பதற்கான உரிமை முற்றாக மறுக்கப்பட்ட காலத்தில் அது ஒரு பிரதான பெண்ணிய முழக்கமாக ஒரு காலத்தில் இருந்தது. இன்று அதே தீவிரத்துடன் இந்தப் பிரச்னையை முன்னிறுத்த வேண்டியிருக்காது. ஆண்களுக்குச் சமமாக வாக்குரிமை வேண்டும் என்று குரல் எழுப்பவேண்டிய அவசியமோ, போராடவேண்டிய அவசியமோ இன்று இல்லை. பணியிடத்தில் நாங்களும் இடம்பெற வேண்டும்; உயர் கல்வி எங்களுக்கு மறுக்கப்படக் கூடாது; சொத்துரிமை வேண்டும்; குழந்தைத் திருமணம் கூடாது; கருக்கலைப்பு உரிமை வேண்டும்; விவகாரத்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவிதமான உரிமைகளை நிலைநாட்டுவதற்குப் பெண்கள் உலகெங்கும் போராடியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கோரிக்கை, ஒவ்வொருவிதமான போராட்டம், ஒவ்வொருவிதமான தேவை.
பெண்ணியம் என்றாலே சில பெண்கள் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஏன்?
இந்தப் போராட்டங்களின் ஆணிவேராகப் பெண்ணியம் இருந்திருக்கிறது. இங்கே பெண்ணியம் என்று நாம் எதை அழைக்கிறோம்? 'என்னுடைய சமூகம் ஏற்றத்தாழ்வானதாக இருக்கிறது. நான் இரண்டாவது பாலினமாகவே சமூகத்தால் பார்க்கப்படுகிறேன். ஒரு பெண்ணாக இருக்கும் ஒரே காரணத்துக்காக குடும்பம், பணியிடம், சமூகம் என்று எல்லா இடங்களிலும் நான் ஒடுக்கப்படுகிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இந்த நிலை தொடரக் கூடாது என்றால் நான் எனக்காகவும் என்னைப் போன்ற மற்றவர்களுக்காகவும் போராடியாக வேண்டும் என்பது புரிகிறது' - இந்த உணர்வு, இந்த ஆதங்கம், இந்தத் தார்மிகக் கோபமே எல்லாப் போராட்டங்களுக்குமான உந்து சக்தியாகத் திகழ்கிறது.
பாலின வேறுபாடு என்றொன்று இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா... இந்த வேறுபாடு களையப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா... அப்படியானால், நீங்கள் ஏற்கெனவே ஒரு பெண்ணியவாதிதான். ஆணாதிக்கம் என்பது ஒரு சமூக யதார்த்தமாக இருக்கிறது என்பதையும் ஏராளமான பெண்களுக்கு அது ஓர் அச்சுறுத்தலாகவும் அவர்களுடைய தன்மானத்துக்கு ஓர் இழுக்காகவும் திகழ்கிறது என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா... அப்படியானால், நீங்கள் ஒரு பெண்ணியவாதிதான். `கிடையாது, நான் ஒரு பெண்ணியவாதியல்ல' என்று நீங்கள் சொன்னாலும் உண்மையில் நீங்கள் அதுதான். என் உடல் என்னுடையது என்று நீங்கள் நினைக்கிறீர்களா... என் உடையை, உணவை, கல்வியை, பணியை, வாழ்க்கைத் துணையை நான் தேர்ந்தெடுத்துக்கொள்வேன் என்று சொல்வீர்களா... சந்தேகமின்றி, நீங்கள் ஒரு பெண்ணியவாதிதான்.
சதி, பலதார மணம், குழந்தைத் திருமணம், பெண் சிசுக்கொலை, பெண்ணடிமை முறை என்று நம்மை பாதித்த சமூகச் சீர்கேடுகள் அனைத்தையும் தகர்த்தெறிய பெண்ணியம் நமக்கு உதவியிருக்கிறது. நான் பெண்ணியவாதி அல்ல என்று அடுத்த முறை அறிவிப்பதற்கு முன்னால், வரலாற்றை எதற்கும் ஒருமுறை புரட்டிப் பார்த்துவிடுங்கள் என்கிறார்கள் கமலா பசீனும் நிகாத் சைய்த் கானும்.
நன்றி - விகடன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo