சீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்!

வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனப் பகுதிகளிலிருந்து இராஜதந்திரிகளையும், தமது பிரஜைகளை வெளியேற்ற உலகெங்கிலும் உள்ள நாடுகள் திட்டமிட்டுள்ளன.


அதன்படி பிரான்ஸ், வடகொரியா, ஜப்பான், கஸகஸ்தான், ஜேர்மனி, மொராக்கோ, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ரஷ்யா, மியன்மார் மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்களே இவ்வாறு தனது நாட்டு பிரஜைகளையும், இராஜதந்திரிகளையும் சீனாவிலிருந்து நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில், வுஹானிலிருந்து தமது நாட்டு பிரஜைகளை கொண்டுவர பிரான்சின் முதல் விமானம் நாளை புதன்கிழமை பாரிஸிலிருந்து புறப்பட்டு, மறுநாள் சீனாவிலிருந்து தமது பிரஜைகளுடன் நாடு திரும்பஉள்ளது என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தோடு இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்படும் அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின், வுஹான் நகரில் வாழும் தமது நாட்டைச் சேர்ந்த 90 பேரை வெளியேற்றும் நடவடிக்கையை ஜேர்மனியும் ஆரம்பித்துள்ளது.

இதுதவிற பிரித்தானியா, தமது நாட்டு பிரஜைகளை வுஹானை விட்டு வெளியேற உதவும் திட்டம் தொடர்பாக பங்காளி நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

வெடிப்பின் மையப் புள்ளியாகவும், 11 மில்லியனுக்கும் அதிகமான சனத் தொகையை கொண்டதுடதுமான ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரம் தற்போதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.