பேருந்துகள் முற்றுகை - மூவர் கைது!
வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்று இரவு 5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓமந்தை, புளியங்குளம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் நேற்றையதினம் புளியங்குளம் புதூர் பகுதியில் இராணுவ சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தினை வழி மறித்து படையினர் சோதனையிட்டனர்.
இதன்போது 3 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைதாவர்களில் ஒருவர் கடற்படை சிப்பாய் எனவும் குறிப்ப்டப்பட்டுள்ளது.
அத்துடன் பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இ.போ.சவை சோதனையிட்டபோது, 2 கிலோ கிராம் கஞ்சாவும் நபர் ஒருவரும் கைதானார்.
இதேவேளை கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 33 கிலோகிராம் கஞ்சாவுடன் பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo