தாய்வானுக்கு தப்பியோடிய ஹொங்கொங் போராட்டக்காரர்கள்!

போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த போராட்டக்காரர்கள், ஹொங்கொங்கிலிருந்து அண்டை நாடான தாய்வானுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சுமார் 80இற்கும் அதிகமானோர் கைது நடவடிக்கைக்கு பயந்து தாய்வானுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தாய்வானுக்கு தப்பி சென்றவர்களின் உண்மையான எண்ணிக்கை 220 இற்க்கும் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. தப்பி சென்ற அனைவரும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.

இதை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி சுமார் 800இற்க்கும் அதிகமானோரை ஹொங்கொங் பொலிஸார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.