காணி அபகரிப்புக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா மாவட்டத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் காணிகளை அபகரித்த அதிகாரிகளைக் கண்டித்து வடமாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.


குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசே யுத்தத்தால் இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக இருக்கும் மக்களின் காணிகளை அபகரிக்காதே, காணி விற்பனையால் கிடைத்ததுஎத்தனை கோடி, காணி ஊழல்வாதிகளை வீட்டுக்குஅனுப்பு போன்ற கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது,

வவுனியா நகரப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய உதயராசா பல காணி மோசடிகளில்ஈடுபட்டமை தொடர்பில் தகவல்களை வெளிக்கொணர்ந்ததை அடுத்து அவர் இடமாற்றப்பட்டுள்ளார் எனினும் அவரைபணி இடை நிறுத்தம் செய்துவிசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

அரசியல்வாதிகளினால் இம்மோசடிகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படாத நிலையில் சாதாரண மக்களே இவ்விடயங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருந்தனர். வன்னியைச் சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களோ அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

உயர்அதிகாரிகளின் ஊழல்கள் இவ்வாறே மறைக்கப்பட்டு வருகின்றது. எனவே இதில் சம்பந்தப்பட்ட கிராம சேவகர்கள் குடியேற்ற உத்தியோகஸ்தர்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டும்.

மக்கள்தாமாக துணிந்து வந்து முறைப்பாடு செய்ய ஆவண செய்யப்படவேண்டும். இன்று இந்தியாவில் உள்ளவர்களின் காணிகளில் கிரவல் அகழப்படுகின்றது. இதனை உடன் தடுத்துநிறுத்தவேண்டும். ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.