கொரோனா வைரஸ் – மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம் என அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


இந்த விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பாக அரச சுகாதார அதிகாரிகளால் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிலரது ஒளிப்படங்களை பதிவிட்டு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவ்வாறு வேறு எந்த வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.