வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!!

தமிழீழத்தில் பன்னாட்டு உதவிகளுடன் சிங்கள அரசினால்
கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப் போரிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரியும், இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும், சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப்போருக்கு எதிராக தமிழீழ – தமிழக மக்கள் நடாத்திவரும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஏழு கோடி தொப்பிள்க்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக நுங்கம்பாக்கம், சென்னை, தமிழகத்தில் 29.01.2009 அன்று தீக்குளித்து ஈகச்சாவைத் தழுவிக்கொண்ட வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் எனும் இளைஞ‌ர் 2009.01.29 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு முன்னால் ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத் தானே தீயிட்டு ஈகச்சாவைத் தழுவிக்கொண்டவர் ஆவார்.

இவர் சென்னையில் பெண்ணே நீ இதழுக்குப் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநர் ஆகவும் வேலை செய்தவர்.

தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப்போரைத் தடுக்கக் கோரியும், தமிழீழ விடுதலைக்கு சாதகமான புறச்சூழலை ஏற்படுத்தவும் தாய்த் தமிழகம், மலேசியா, சுவிஸ்சர்லாந்து ஆகிய நாடுகளிலே தமது இன்னுயிர்களை தீயினிற் கருவாக்கிய அனைத்து ஈகியர்களையும் இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Blogger இயக்குவது.