கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வில் மோதல்!!

கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களிக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.


தவிசாளர் தலைமையில் கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வு ஆரம்பமாகியதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சந்திரகுமார் தலைமையிலான உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து 10 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் சபை அமர்வுகள் ஆரம்பமாகிய போதும் வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பு வரை சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜீவராசா மீது சுயேட்சைக்குழு உறுப்பினர் ரஜனிகாந்த் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்குதலுக்கு இலக்காகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.