ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக நியமனம்!!

இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இவரது நியமனத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் 32ஆவது வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலேவின் பணிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து  33ஆவது வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (புதன்கிழமை) பதவி ஏற்றுள்ளார்.

இதற்கு முன்னர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அமெரிக்காவுக்கான இந்திய தூதராக செயற்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.