அமெரிக்காவின் அமைதி திட்டத்துக்கு எதிராக பாலஸ்தீனத்தில் போராட்டம்!

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்வைத்துள்ள மத்திய கிழக்கு அமைதி திட்டத்திற்கெதிராக பாலஸ்தீனத்தில் போராட்டம் வெடித்துள்ளது.


இந்த அறிவிப்பினால் மிகுந்த கோபமும் ஏமாற்றமும் அடைந்துள்ள பாலஸ்தீன மக்கள், ஜோர்தான் பள்ளத்தாக்கு, அல்-ஓருப் அகதிகள் முகாம் மற்றும் துல்கர்ம் ஆகிய பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தினை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய படைகள் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி திரண்டுள்ள கூட்டத்தினை கலைத்து வருகின்றனர்.

இதுவரையான நிலவரப்படி, இஸ்ரேலிய படைகள் மற்றும் போராட்டக்காரர்களின் மோதல்களில் 41பேர் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோமு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனிய மாணவர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு காசா பகுதியில் டயர்கள் எரித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், நாங்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் மற்றும் பல தசாப்தங்களாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்து வருகிறோம். எனவே, இந்த அறிவிப்பு புதியதாகவோ அல்லது அதிர்ச்சியாகவோ இல்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

பாலஸ்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு அரசு என இரண்டாக பிரிக்க கடந்த 1947ஆம் ஆண்டு ஐ.நா பரிந்துரைத்தது. அதன் பிறகு 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் எனும் தனிநாடு உருவானது. அப்போதே பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது.

1967ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன எழுச்சி உருவானது.

திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பல ஆண்டுகளுக்கு பிறகு 2014ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தை கசப்புடன் முறிந்தது. இந்த சூழலில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்தது. இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான மோதல் மேலும் வலுத்தது.

இந்த நிலையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக மத்திய கிழக்கு அமைதி திட்டம் என்ற ஒரு திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.