கிழக்கில் வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்கள்!!

மாநகர, நகர, பிரதேச சபைகளின் பதவி வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்குவது தொடர்பாக உள்ளூராட்சி முதன்மை அங்கத்தவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கலந்துரையாடலொன்றினை நடத்தியிருந்தார்.


மட்டக்களப்பு உள்ளூராட்சி மன்றங்களின் முதன்மை அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல்  நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள செயலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ், மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவன், ஆணையாளர் கே.சித்திரவேல், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி முதல்வர் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமான இந்த கலந்துரையாடலில், மாநகர, நகர, பிரதேச சபைகளின் பதவி வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்குதல், தற்காலிகமாக வேலை செய்பவர்களின் நியமனங்களை நிரந்தர நியமனமாக்குதல், முகாமைத்துவ உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், நூலகர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்குதல், கழிவு முகாமைத்துவம், குப்பைகளை கொட்டும் இடங்களுக்கான தேவைகள், அதன் அபிவிருத்தி, வேலைகளுக்கு தேவையான வாகனங்களை கொள்வனவு செய்தல், வரி அறவீடு, வீதி அபிவிருத்தி, பொதுக் கட்டடங்கள், சிறிய பாலங்கள் நிர்மாணித்தல், நிலம் குடிநீர் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற பல விடயங்ககள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.