மட்டக்களப்பில் நஞ்சூட்டப்படும் பழங்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியில் ஒரு வியாபார நிலையத்தில் நான் உரையாடிக்கொண்டிருக்கும் போது, வியாபாரி ஒருவர் வாழைக்குலைகளுக்கு ஸ்பிரே மூலம் நீர் தெளிப்பதை அவதானித்தேன்.


அதில் பிஞ்சு குழைகளும் இருப்பதை அவதானித்த நான் கடை உரிமையாளரிடம் விசாரித்தேன் இந்த நீர் எதற்காக தெளிக்கப்படுகின்றது என்று .?

அப்போது அவர் கூறினார் 24 மணித்தியாளத்துக்குல் இக் குழைகள் அனைத்தும் பழமாகி விடும் என கூறினார்.

அப்போது அந்த மருந்தை நான் எடுத்து பார்த்த போது அது நான்"அறிய இலங்கை அரசு அனுமதித்தது அல்ல அதன் பெயர் Pary Shoot. இந்த Pary Shoot தற்பொழுது அனைத்து வகையான பழங்களுக்கும் பாவனை செய்யப்படுகின்றது.

கடந்த 5 வருடத்துக்கு முன்பாக பழக்கடைகளிள் புகை வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்படும்.

அது நமக்கு ஆரோக்கியமாக இருந்தது.

இந்த Pary Shoot பாவனையால் பல நோய்கள் வருவதை அவதானிக்க முடிகின்றது.

* பச்சை காயை 24 மணித்தியாளத்துக்குல் பழமாக மாற்றும் சக்தியிருந்தால் மென்மையான மனித உடலுக்குல் சென்றால் என்னவாகும்..??

* அரசு தடுத்தும் எப்படி வியாபார நிலையங்களுக்கு வருகின்றது..??

* இந்த மருந்து பாவனை செய்த பழங்களை நம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பது நஞ்சூட்டுவதற்கு சமனாகும்.

* நல்லாட்சி அரசு எதிர்கால இலங்கை பிரைஜைகளை நல்ல ஆரோக்கியமான பிரஜைகளை வளர்க்க வேண்டும்.

அதற்கு இப்படியான நஞ்சு பதார்த்தங்களை தடுக்க வேண்டும்.

இலங்கையில் சீன இராசாயன பதார்த்தங்கள் வந்து பாவனை அதிகரித்ததன் மூலம் கடந்த 5 வருடத்துக்குள் பிறந்த குழந்தைகளின் மூளை செயல்பாட்டையும் ,அதற்கு முதல் உள்ள குழந்தைகளின் மூளை செயல்பாட்டையும் உற்று நோக்கும் போது உங்களுக்கு புலப்படும்.

கடந்த 5 வருடத்துக்குல் பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சி,உடல் ஆரோக்கியம்,ஞாபகச் சக்தி மிக,மிக மந்தகதியாக இருக்கின்றது. இதற்கு காரணம் இப்படியான இராசாயன பதார்த்தங்களின் பாவனையே. இதை தடுக்காமல் போனால் இன்னும் பத்து வருடத்தில். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள்,குடல் புற்றுநோய்,அல்சர் எனும் கொடிய நோய் ஏற்படும்.

இப்படி பல தாக்கத்தை நமது உடலில் ஏற்படுத்துகின்றது. முக்கியமாக ஒரு விடயத்தை இங்கு கூறியாக வேண்டும். அதாவது அல்சர் எனும் கொடிய நோய் தற்போதய மனித இனத்தை ஆட்சி செய்கின்றது. இது அனைவரும் அறிந்த விடயம் 2 வயது குழந்தை தொடக்கம் 60 வயது முதியோரையும் கூட விட்டுவைக்கவில்லை.

இந்த அல்சர் எப்படி வருகின்றது என்றால் வைத்திய நிபுணர்கள் "குறிப்பிடுவது காலை உணவு சாப்பிடாமல் இருப்பதனாலே என்பார்கள்.

அது ஒரு காரணமாக இருந்தாளும் அல்சர் (குடலில் ஏற்படும் காயங்களால்) நோய் என்பார்கள். ஆனால் தற்போதய அல்சர் நெஞ்சு பகுதி எரியூட்டுவதையும் சேர்த்து விட்டார்கள்.

நெஞ்சுக்குல் எரிப்பது,வயிற்றுப் புண் ஏற்படுவது, இரத்த கொதிப்பு இந்த அல்சரினால் அல்ல இந்த இராசயான பதார்த்தங்களை பாவனை உணவினாலே தவிர வேறு இல்லை.

இந்த இராசாயன பதார்த்தை கையில் எடுத்துப்பாருங்கள் ஒரு எரிவுத்தண்மையை தரும். இந்த இராசயம் நமது உடளுக்குல் சென்றால் எது மெல்லிய பகுதியோ அதை அது வேகமாக தாக்கும். அதுதான் தற்போதய அல்சர் என்கின்றனர். அதிகமாக உணவு உண்ணாமல் இருப்பதால் உடல் சோர்வு வருமே தவிர நோய்கள் வருவது கிடையாது.

நம் முன்னோர்கள் உணவு உண்டதற்கும்,தற்போதய சமூகம் உணவு உண்பதற்கும் ஒப்பிட்டு பார்த்தால் தற்போதய மனித சமூகம்தானே ஆரோக்கியமாகவும்,வயதில் கூடுதளாகவும் வாழ வேண்டும்...? முன்னய சமூகத்தோடு"ஒப்பிடுகையில் தற்போதய சமூகம் 100% க்கு 20% தான் ஆரோக்கியமாக வாழ்கின்றது.

இதற்கான காரணம் என்ன..?சிந்தியுங்கள்.......!!

இது எனது ஆய்வு ஆகும் இதற்கு மருப்பு தெரிவிக்கும் வைத்தியர்கள் உண்டா..??இதை அரசு கவணத்தில் எடுக்குமா..?? அதை விட முக்கியமாக தாய்,தந்தையர்கள் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்ளுங்கள்..

மட்டக்களப்பு வாசி ஒருவரின் வேதனையான பதிவு
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.