ஸ்டாலினைப் புகழ்ந்த சசிகலாவின் சகோதரர்!

திமுகவின் தஞ்சாவூர் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான பழனிமாணிக்கம் இல்லத் திருமணம்  ( ஜனவரி 31) தஞ்சாவூரில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு நடத்தி வைத்த இந்தத் திருமணத்தில், சசிகலாவின் சகோதரரும் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளருமான திவாகரன் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ரகுபதி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பழனிமாணிக்கமும், திவாகரனும் உறவினர்கள் என்ற முறையில் திருமணத்தில் திவாகரனும் கலந்துகொண்டார். உதயநிதிக்கு பக்கத்தில் திவாகரன் அமர்ந்திருந்தார். இருவரும் நன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஸ்டாலின் முன்னிலையில் திவாகரன் பேசுகையில்,

“இன்று தமிழ்நாட்டின் நிலை மிக கேவலமாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தர நிலையில் நடத்தப்படுகிறோம். கன்னடத்திலிருந்து வந்த ஒருவர், பெரியாரைப் பற்றியெலலம் பேசும் அளவிற்கு இன்று துணிச்சல் வந்துள்ளது. திராவிட இயக்கத் தலைவர்கள் ஒருவர், ஒருவராக மறைந்ததால் இந்த நிலை வருகிறது. தமிழ், தமிழகம் தான் நமக்கு முதல் முக்கியம். அதை காப்பவர்களுக்கு பின் நாம் நிற்க வேண்டும். தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.

அரசியலில் நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். சிலருக்கு இடைஞ்சல் செய்வதற்காகவே அசியலுக்கு வந்தேன். நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 85% திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலும் ஆளுங்கட்சியால் தட்டி பறிக்கப்பட்டிருக்கிறது” என்று கூற பலரும் புருவம் உயர்த்தினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.