யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டிப்பதாகத் தெரிவித்து நெடுந்தீவு மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கஜன் இராமநாதன் ஒருங்கிணைப்புக் குழுத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மக்கள் விரும்பித் தெரிவு செய்த திட்டங்களை மாற்றியமைத்து திட்டமிட்ட வகையில் தங்களை பழி வாங்குவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் கிராமத்துக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட 2 மில்லியன் திட்டத்தை தாம் தமது பிரதேசத்தின் நலன்களை மையமாக கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் தனது சுயநல அரசியலுக்காக மாற்றி தேவையற்ற திட்டங்களை தமக்கு திணிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தாம் முன்மொழிந்த திட்டங்களே தமக்குத் தேவையென வலியுறுத்தி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo