சீனா செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை!!
சீனாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே சீனாவிற்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், விமான சேவை நிறுவனங்களுக்கும் சீனாவுக்கான தமது சேவைகளை குறைக்குமாறு அல்லது தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை சீனாவில் 9 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலக 23 நாடுகளைச் சேர்ந்த 9,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மொத்தமாக 21 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 184 பேர் கொரோனாவின் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்த நிலையில், சீனாவில் உயிரிழப்பானது 170 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo