சிறுமிகளின் நிர்வாண புகைப்படம்: நித்தியின் கொடுமை!

தலைமறைவாக உள்ள சர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனது இரு மகள்களை நித்யானந்தாவிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா நேற்று ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.


அதில் கூறப்பட்டுள்ள நித்யானந்தா தொடர்பான புகார்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. “நித்யானந்தா ஒரு வாட்ஸ் அப் குழுவை நடத்தி வந்தார். அதில் தனது இரு மகள்கள் உட்பட 12 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவில் உள்ளவர்கள் தங்களது நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள நித்யானந்தாவால் வற்புறுத்தப்பட்டனர்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே இரு மகள்கள் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்தில் செயல்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்த பிரணாபிரியா மற்றும் தத்வபிரியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம் விடுவிக்க மறுத்ததை அடுத்து இருவரும் உயர் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப் பிரமாணப் பத்திரத்தில் ஜனார்த்தனன் சர்மா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி நித்யானந்தாவுடன் தொடர்புடைய கலோலக்ஸ் ஃப்வுண்டேசன் எம் டி மற்றும் சிஇஓ மஞ்சுளா பூஜா ஷிராஃப், அன்ஸ்டாப்பபிள் நிறுவனர் அமிதாப் ஷா ஆகியோர் தனது குழந்தைகளை ஒப்படைக்க எதிர்ப்பதாகவும், என் மனைவிக்கும் எனக்கும் தெரியாமல், என் மகள்களை நாடுகடத்த உதவியுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிரமத்தில் சிறுமிகள் ருத்ரகன்யாஸ் என்று அழைக்கப்பட்டனர். பணக்காரர்களிடம் இருந்து நன்கொடைகளைப் பெறுவதற்குச் சிறுமிகள் எந்த எல்லைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். ஆன்மீக தீட்சை என்ற போர்வையில் இரவில் நித்யானந்தாவின் ரூமுக்கு செல்ல சிறுமிகள் வற்புறுத்தப்பட்டனர் என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

”கடந்த நவம்பர் 1 ஆம் தேதி நான் எனது பெற்றோருடன் வீடு திரும்பியபோது, பிரணாபிரியா நித்யானந்தா, ரஞ்சிதா, மஞ்சுலா ஷிராஃப், மா பக்திபிரியா, மா பிரியதத்வா, மா அச்சலா மற்றும் அமிதாப் ஷா ஆகியோர் கான்பிரன்ஸ் காலில் இருந்ததை நினைவில் கொள்கிறேன். அந்த அழைப்பில் எனது பெற்றோருக்கு எதிராக அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டினர் என்று மீட்கப்பட்ட தனது மகள் கூறியதாக” ஜனார்த்தனன் சர்மா பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.