தங்கைக்கு அண்ணன் செய்த கொடூரம்!

புத்தல, ஜனாவாச பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாணவியின் மூத்த சகோதரரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மாணவி கடந்த 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக அவரது மூத்த சகோதரரால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்போது, குறித்த மாணவி 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாணவி அவரது காதலருடன் வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

குறித்த மாணவியின் காதலருக்கு 28 வயது என தெரிவிக்கப்படும் நிலையில் அவர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவி புரிந்த மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (07) புத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை முதலில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அவரது மூத்த சகோதரரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், காதலன் என்று கூறப்படும் சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேகநபர் நாளை (09) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.