தனி மனித உரிமை மீறல்: பேஸ்புக் 50 கோடி அபராதம்!

பேஸ்புக், தனது முக அங்கீகார தொழில்நுட்பத்தின் மூலம் தனிமனித உரிமையை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை தீர்ப்பதற்காக 550 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ளது.


அமெரிக்க மாகாணத்தின், இல்லியனோய்ஸ் என்னும் மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கில், "டேக் ஆப்ஷன்" மூலம் நாம் உபயோகிக்கும் புகைப்படத்தில் உள்ள நபர்களின் முகங்களை ஸ்கேன் செய்து அவரின் பெயர் மற்றும் விவரங்களைப் பரிந்துரையின் மூலம் பெறமுடிகிறது. பயனரின் அனுமதியின்றி முக அங்கீகாரத்தின் மூலம் அவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை சேகரிப்பதாகவும், இது இல்லினாய்ஸ் பயோமெட்ரிக் தகவல் தனியுரிமை சட்டதை மீறுவதாகவும், பேஸ்புக்கின் மீது கடந்த 2015-இல் வழக்கு தொடரப்பட்டது.

2018 ஆம் ஆண்டு இதை விசாரித்த ஒரு பெடரல் நீதிபதி இதனை "ஒரு வர்க்க நடவடிக்கை வழக்காக" கருதலாம் என்று பேஸ்புக்கிற்கு எதிராகத் தீர்ப்புவழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து பேஸ்புக் மேல்முறையீடு செய்தும் பலனின்றி தீர்ப்புகள் எதிராகவே அமைந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் முடிவாக பேஸ்புக் இல்லியனோய்ஸ் பயனர்களுக்கு கிட்டத்தட்ட 550 மில்லியன் டாலர்களை செலுத்தவுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தீர்வுத்தொகை இதுவரை தனியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்தால் கட்டப்படும் பெரிய தொகையாக இருக்கும் என்று இந்த வழக்கின் வாதிகளை பிரதிநிதிப்படுத்திய ஒருவரான சட்ட நிறுவனர் எடில்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்வுத்தொகை மூலம் 2011 - 2015 ஆண்டுகளின் இடைப்பகுதி வரையுள்ள இல்லினாய்ஸ் பேஸ்புக் பயனர்கள் பல காரணிகளைப் பொறுத்து தலா 200 டாலர் வரை நஷ்ட ஈடாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த ஆறு மாதத்தில் பேஸ்புக் நிறுவனம் செலுத்தவிருக்கும் இரண்டாவது பெரும் அபராதத் தொகையாக இந்த தீர்வுத்தொகை அமைந்துள்ளது. இதற்கு முன் அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையத்திடம் 500 மில்லியன் டாலர்கள், இதேபோன்று தனியுரிமை மீறலுக்காக செலுத்தியது.

இந்த வழக்கு தீர்வுக்கு வந்ததைத்தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த முக்கியமான வழக்கை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்மானத்தை கொண்டு ஒரு வலுவான அணியாக செயல்பட்டதற்கு அவர்கள் பெருமிதம் கொள்வதாகவும், பேஸ்புக்கின் நிலையை கருத்தில்கொண்டு மற்ற நிறுவனங்களும், தனிமனிதனின் பயோமெட்ரிக் தகவல்களின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்ப்பதாக எடில்சன் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.