கொரோனா நோயாளிகளைப் பராமரிப்பதற்காக தலை முடியை மொட்டை அடித்த பெண் தாதி..!!

பெண் தாதி ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளிகளைப் பராமரிப்பதற்காகத் தனது நீண்ட தலை முடியை பராமரிப்பதற்கு அதிக நேரம் வீணாகின்றனது எனத் தெரிவித்து தாதியொருவர் தனது தலைமுடியை வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.


சீனாவின் வுஹானைச் சேர்ந்த சான் சியா என்ற 30 வயதான பெண் தாதி ஒருவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தின் ரென்மின் வைத்தியசாலையில் பணியாற்றிவருகிறார்.

குறித்த பெண், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களைப் பராமரிப்பதற்கான நேரம் இன்மையால் பெண் தாதி ஒருவர் தனது நீண்ட கூந்தலை வெட்டி தலையை மொட்டை அடுத்துள்ளார்.

குறித்த பெண் இது தொடர்பில் தெரிவிக்கும் போது குறித்த கொரோனா வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்காக, பாதுகாப்பு ஆடைகளை அணியும் போதே அதிக நேரம் செலவாகின்றது.

அத்தோடு தனது நீண்ட கூந்தலை வாரினால் மேலும் அதிக நேரம் வீணாகி விடும் இந்த நேரத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களை கவனிக்கமுடியும். இதனால் எனது நீண்ட கூந்தலை வெட்டி மொட்டை அடித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.